×

அண்ணா வழியில் அயராது உழைத்திடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

அண்ணா கூறியபடி ஓர் உண்மையான கூட்டாட்சி அமைய வரும் தேர்தலில் #INDIA கூட்டணி வெற்றி பெறுவது அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

அயல்நாட்டில் இருந்தாலும், என் எண்ணமெல்லாம் நாளை பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் அவர்தம் அன்புத்தம்பியர் அணிவகுக்கும் அமைதிப் பேரணி மீதே இருக்கிறது. அமைதிப் பேரணியில் நம் அன்பு உடன்பிறப்புகள் அலையலையாய் வங்கக் கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே ஸ்பெய்னில் அண்ணாவின் படத்துக்கு மலர்தூவி உங்களில் ஒருவனான நானும் மரியாதை செலுத்துகிறேன்.