தமிழக ஆளுநரை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி பங்கேற்பு
காந்தியை இழுவுப்படுத்தி பேசியதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை இழிவுபடுத்தி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. எம்.ஏ. முத்தழகன், திரு. எம்.எஸ். திரவியம் MC, திரு. ஜெ. டில்லிபாபு MC, திரு. எம்.பி. ரஞ்சன்குமார், திரு. சிவராஜசேகரன் MC, திரு. அடையாறு த. துரை, திரு. துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ., திரு. ஆர்.எம். தாஸ், திரு. ஆவடி யுவராஜ், திரு. ஆர்.எஸ். செந்தில்குமார், திரு. ஆர். சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.