புயல் நாளை தான் கரையை கடக்கும் - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்க வாய்ப்பு இல்லை எனவும், நாளை தான் கரையை கடக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதேபோல் புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்க வாய்ப்பு இல்லை எனவும், நாளை தான் கரையை கடக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அடுத்த மேகக்கூட்டம் உருவாகி வருவதாகவும், இதனால் சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். புயல் கடலில் இருக்கும் வரை திடீரென மேகங்களை உருவாக்கி நிலத்தை நோக்கி தள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.