×

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

 

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழா. இந்த கந்த சஷ்டி விழா அனைத்து முருகன் கோயில்களிலும் கடந்த திங்கட்கிழமை யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று கோவர்த்தன் அம்பிகையிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய சக்தி வேலை வாங்கும் வேல் வாங்கும் விழா நிகழ்வு நடைபெறும்.

பின்னர் 18-ஆம் தேதி சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் விழாவின் சிகர நிகழ்வாக சூரபத்மானை அளிக்கும் சூரசம்ஹார லீலை நடைபெறும். பின்னர் 19-ஆம் தேதி  கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான பாவாடை தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும் சுவாமி தங்கமயில் வாகனத்தில் வீதிகளில் வலம் வரும்.

இந்நிலையில் தூத்துக்குடியில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நவம்பர் 18 ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.