×

மாணவர்களை கால் அமுக்க வைத்த ஆசிரியர்! அரசு பள்ளியில் அரங்கேறிய அவலம்

 

வீரகனூர் அருகே கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை கால் அழுத்த சொல்லி வகுப்பறையில் ஓய்வெடுக்கும் கணக்கு  போதை ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட வீரகனூர் அருகே உள்ள கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 49 மாணவிகள், 41 மாணவர்கள் என 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்வி பயின்று வருவதோடு தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதனிடையே பள்ளியில் பணியாற்றி வரும் ஏழாம் வகுப்பு ஆசிரியர் காமக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிராகாஷ் எனும் கணக்கு ஆசிரியர் குடிபோதையிலே பள்ளிக்கு வருவதோடு மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுக்காமல் வகுப்பறையிலே குடிபோதையில் மட்டையாவதோடு மாணவர்களை கால் அழுத்த சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை தமிழக அரசும் போதையில் வந்து பாடம் கற்பிக்காமல் மாணவர்களை கை கால்களை பிடித்து விடச் சொல்லும் போதை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.