×

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு.. ஐஸ்கிரீம் வண்டிக்கு இணைப்பு கொடுத்த போது சோகம்.. 

 


 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஐஸ்கிரீம் வண்டியின் ஃப்ரீஸர் பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க ஸ்விட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரது  மனைவி சத்யா(வயது 24). இவர்களது குடும்பத்தினர் மினி வேன்களில் கொண்டு சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். மொத்தம் 3 வாகனங்கள் வைத்து குடும்பத்தினர் அனைவரும் தொழில் செய்து வந்த நிலையில்,  சத்யா இன்று ஒரு வேனின் ஐஸ்க்ரீம் ஃபிரீஸர் பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க சுவிட்ச் போட்டுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக சத்யாவின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சத்யாவை அவரது குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.