×

இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பாகிஸ்தானில் பயங்கரம்..!

 

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரின் சாலையோரத்தில் ஒரு இளம்பெண் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமவனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அந்த பெண்ணிற்கு 28 வயது ஆகிறது. அவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில்தான் அவர் பாகிஸ்தான் வந்தார். ஒரு கும்பல் தொடர்ந்து 5 நாட்கள் அடைத்து வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீசில் தெரிவித்தார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்பெண் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் தமீசுதீன் என்பவரை விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தானில் நேற்றுதான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.