×

அதானி நன்கொடை: தெலுங்கானா முதல்வர் நிராகரிப்பு..!

 

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள இளம் இந்தியா திறனாய்வு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை அளிக்க முன் வந்துள்ளார் உலக பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான தொழிலதிபர் அதானி. இந்த நிலையில், அதானி குழுமத்தின் நன்கொடையை வேண்டாமென நிராகரித்துள்ளது தெலங்கானா அரசு. அதுவும், சிறிய தொகையல்ல.. நன்கொடையாக அளிக்க முன்வந்த தொகையை, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

அதானி குழுமம் மட்டுமல்லாது, வேறு எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் இதுவரை ஒரு ரூபாய் கூட தெலங்கானா அரசு பெறவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் ரேவந்த் ரெட்டி. இப்போதைய சூழலில், அதானி குழுமம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தரப்பிலிருந்து அரசு நன்கொடை பெறுவது வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துமென்பதால், தெலங்கானா அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதானி குழுமத்துக்கு, மாநில அரசு தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.