×

"தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் உத்தர பிரதேசத்திற்கு செல்கின்றன"- தங்கம் தென்னரசு

 

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் மத்திய அரசு நடத்துகிறது. சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணி செல்வை தமிழக அரசு ஏற்றத்ல் ரூ.12,000 கோடி அளவுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை. நாக்பூர், கொச்சி, புனே ஆகிய நகரங்களுக்கு 2ஆம் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு நிதியும் அனுமதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. 

பேரிடர் நிவாரண நிதி ரூ.37,000 கோடி கோரப்பட்ட நிலையில் தமிழகத்துக்கு ரூ.232 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது. மாநில அரசுக்கான வரி பகிர்வு முறையாக வழங்கப்பட வேண்டும். மின் பகிர்மானத்திற்கு மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் உத்தர பிரதேசத்திற்கு செல்கின்றன. நமது மாநிலத்திற்கு தரக்கூடிய திட்டங்களுக்கான பங்களிப்பை ஒன்றிய அரசு குறைத்துக்கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டிற்கான ரயில்வே, நெடுஞ்சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனத்துடன் நடந்து கொள்கிறது.  அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசின் கொள்கைமுடிவு பரிசீலனையில் உள்ளது. யானை வழித்தடங்களில் உள்ள மின் மாற்றிகளில் மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர் நிறுவப்படும்” என்றார்.