×

தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை குத்திக் கொலை 

 

தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை ரமணி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதன் குமார் என்ற இளைஞர் ஆசிரியை ரமணியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்ததால், ஆத்திரத்தில் பள்ளிக்கு சென்று குத்திக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதமாக ஆசிரியை ரமணி பேசுவதை தவிர்த்து வந்ததால் கொலை செய்துள்ளார்.  மதன் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தஞ்சாவூரில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பவம் நடைபெற்ற தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு பள்ளிக்கு செல்லவுள்ளேன். விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் பள்ளிக்கு நேரில் செல்கிறார் என கூரியுள்ளார்.