×

"ஒரு கை பார்த்துவிடுவோம்"  - உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

 

இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அமைச்சரும், திமுக இலைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றியத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம். மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன் வைத்து நடைபெற்ற நம் மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் வருகை தந்து சிறப்பித்த லட்சோப லட்சம் இளைஞரணி தம்பிமார்கள் அனைவருக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமாக தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாநாட்டினை நடத்துவார்கள். ஆனால், இந்த முறை நம் தி.மு.கழக இளைஞர் அணிக்கு மாநாடு நடத்துகிற வாய்ப்பை நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்தார்கள்.2007 ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை நடத்திக் காட்டிய நம் முதலமைச்சர் அவர்கள், 2024-ல் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திட பணித்ததோடு, அதற்கான ஊக்கத்தையும் - உற்சாகத்தையும் தந்தார்கள். கழகத் தலைவர் நம் முதலமைச்சர் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.

நம்முடைய சேலத்துச்சிங்கம் வீரபாண்டியாரின் சேலம் மண்ணில் இந்த மாநாட்டை நடத்துவது என்று முடிவான போதே, இந்த மாநாட்டின் வெற்றியும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. மாநாடு நடக்கும் இடம் சேலம் என்று நமது தலைவர் அவர்கள் அறிவித்த அடுத்த நொடியில் இருந்து வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல கழக முதன்மை செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள் களத்தில் இறங்கி செயலாற்றத் தொடங்கினார்கள். நமது தலைவர் அவர்கள், அவர்களது உரையில் "மாநாடு நடக்கும் இடத்தில் நேரு இருப்பார், அல்லது, நேரு இருக்கும் இடத்தில் மாநாடு நடக்கும்" என்று பாராட்டியதைப் போல; தான் ஒரு செயல் புயல் என்று மாநாட்டின் ஏற்பாட்டின் மூலம் நிரூபித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், மேலும், மாநாட்டுத்திடல் மட்டுமன்றி சேலம் மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைத்த காவல்துறை அதிகாரிகள் - அலுவலர்கள் - மாநாட்டிற்கான தன்னார்வலர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்,மாநாட்டுத்திடலில் சமையற்கூடத்தில் பணியாற்றியவர்கள் - உணவு பரிமாறியவர்கள் ஒளி - ஒலி அமைந்தவர்கள் அனைவருக்கும் என் நன்றிநேற்று வரை நமது மாநாடு தான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மாநாடு பெற்ற பிரம்மாண்ட வெற்றியின் விளைவு. நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் பொறுப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.  எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது இதுவரை உழைந்துவிட்டு இனி ஓய்வெடுத்தான் அது முயல் - ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும். நமது மாநாட்டின் நோக்கம் “மாநில உரிமை மீட்பு", அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்றும்.
இன்னார்க்கு இன்னது என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் - அவர்களுக்கு ஆமாம் சாமி போடும் அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது.


-
மத அரசியலா மனித அரசியலா? மனு நீதியா - சமூக நீதியா? மாநில உரிமையா? - பாசிச அடக்குமுறையா? என ஒரு கைபார்த்துவிடுவோம். வெல்லப்போவது சமூக நீதியும் சமத்துவமுமே என்பதை இளைஞர் அணி மாநில மாநாடு நமக்கு கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்த நேரத்தில் மாநாட்டில், தலைவரின் உரையிலிருந்து இந்த தேர்தல் நேரத்தில் நான் அடிக்கோடிட்டு காட்ட விரும்பும் கருத்துக்களை கூற விரும்புகிறேன்.நாடும் நமதே, நாற்பதும் நமதே.இந்தியாக் கூட்டணி வென்றால் கலைஞரின் முழக்கமான "மத்தியில்கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்பது இந்தியாவின் முழக்கமாகும். நரேந்திர மோடி 2 முறை பிரதமராகி இருக்கிறார். அந்த இரண்டுதேர்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்கவில்லை. இப்போது 3-ஆவது முறையும் தமிழ்நாடு அவரை ஏற்கப் போவதில்லை.இந்த வார்த்தைகள் மூலம், நமக்கு வழிகாட்டுதலையும் உற்சாகத்தையும் நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தந்துள்ளார்கள்.
முக்கியமாக கழகத்தலைவர் அவர்கள் கூறிய இன்னொரு கருத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
"இந்த மாநாட்டில் கூடியிருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும் போது நான் லட்சம் இளைஞர்களின் சக்தியை பெறுகிறேன். இங்கே உதயநிதி மட்டுமல்ல. இங்கு வந்திருக்கும் ஒன்னொருளாருர்: கான்றைடைய மகன் தான். திராவிட இயக்கத்தின் கொள்ளக வாரிசு தான்," என்று சொன்னார்களே, அதுதான் என்னை பொருத்தவரை நமது மாநாட்டு வெற்றியின் அளவீடு.
லட்சம் இளைஞர்களின் சக்தியை நமது தலைவர் அவர்கள் பெற்றுவிட்டார்கள். அளயின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம். தேர்தல் களத்தில் உழைப்போம்! மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்.
பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டி - அடிமைகளை புறந்தள்ளி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் அவர்களின் ஈரங்களில் சேர்ப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.