×

திருமண ஆவணப்படம்- உதயநிதி, ஷாருக் கானுக்கு நயன்தாரா நன்றி

 

தனது ஆவணப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது ‘Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தனது அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின், ஷாருக்கான் மற்றும் பல்வேறு தயாரிப்பாளர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ள நயன்தாரா, அதில் தனுஷ் பெயரை தவிர்த்துள்ளார்.