அன்று 'நான் யார் தெரியுமா.. கனிமொழி எம்பி பிஏ ஓட தம்பி'.. இன்று மன்னிப்பு கேட்டு வீடியோ
Oct 3, 2024, 16:11 IST
மது போதையில் கோவை போக்குவரத்து காவலரிடம் தகராறு ஈடுபட்ட இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கிரண், பாலாஜி, சிவா ஆகிய மூன்று இளைஞர்கள் நேற்று முன்தினம் காரில் கோவை வந்தனர். அப்போது காந்திபுரம் 100 அடி சாலையில் வந்த போது, போக்குவரத்து போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த மூன்று பேரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போக்குவரத்து காவலர் விசாரித்த போது தான் கனிமொழி எம்.பி உதவியாளரின் உறவினர் என்று கூறி, போலீஸாரை மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.