அண்ணியை பலாத்காரம் செய்ய முயன்ற தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
ஓசூர் அருகே அண்ணன் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் போலீசில் சரண் அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே மலை கிராமத்தில் அமைந்துள்ள பகுதி உடுங்கல் போடூர் கிராமம். இந்த கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அணைவருக்கும் திருமணம் ஆகி தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். ந்த நிலையில் மூத்த அண்ணன் மாதேஷ் 45 கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தம்பியான வெங்கடேஷ் 40 பெங்களூருவில் தேன் எடுக்கும் தொழில் செய்து வந்தவர் பெங்களூருவில் இருந்து கொண்டு அடிக்கடி விடுமுறையில் தனது கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாதேசுக்கும் வெங்கடேசுக்கும் ஏற்கனவே நிலப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி இந்த சம்பவம் தொடர்பாக வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இன்று ( ஞாயிறு )விடுமுறை நாளில் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த வெங்கடேஷ் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அண்ணன் மாதேஷ் இல்லாதபோது தனிமையில் இருந்த அவரது மனைவி ரீனா 40 அண்ணியை பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணனின் மனைவி ரீனா உடனடியாக அங்கிருந்து தப்பி அப்பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்த தனது கணவர் மாதேஷிடம் சென்று தம்பி செய்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஷ் ஏற்கனவே நில பிரச்சனை இருந்த நிலையில் வந்த நிலையில் தற்போது தனது மனைவியிடம் தம்பி பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றதை அறிந்து ஆத்திரமடைந்தார். அதே நேரம் மாதேஷ் வேலை செய்யும் இடத்திற்கு கையில் கத்தியுடன் வந்த தம்பி வெங்கடேசன் மாதேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதேஷ் தான் வைத்திருந்த அறிவாளள் சரமாரியாக தம்பியின் வயிற்று பகுதி, கழுத்து மற்றும் நெஞ்சு பகுதியில் சரமாரியாக பலமாக வெட்டி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து மாதேஷ் அருகே இருந்த குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்த்தபோது வெங்கடேசன் உயிரிழந்து கிடப்பதை கண்டு போலீசார் சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சூளகிரி போலீசார் உயிரிழந்த கிடந்த வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் மனைவியிடம் தம்பி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த அண்ணன் தன் சொந்த தம்பியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.