×

தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி விடுவிப்பு

 

மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.178,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.  ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில்,  2024 அக்டோபர்  மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது.  

மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173  கோடியை  இன்று விடுவித்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி / நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்றவகையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடியும், பீகாருக்கு ரூ.17,921 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.