×

'கோட்' படத்தின் விளம்பர பலகைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி!

 

சென்னையிலுள்ள திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள நடிகர் விஜயின் கோட் பட விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’- தி கிரேட்டஸ்ட் ஆஃப்  ஆல் டைம். இந்தப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா , லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கோட்’ படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வருகிறது.  

கோட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.390க்கு டிக்கெட் விற்கப்படுகிறது. காரணம் ரோகிணி திரையரங்கில் தி கோட் திரைப்படத்தின் முதல்நாள் காட்சிக்கான டிக்கெட்டுடன் சேர்த்து உணவும் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற திரையரங்க நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. இந்நிலையில் சென்னையிலுள்ள திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள நடிகர் விஜயின் கோட் பட விளம்பர பலகைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியுள்ளது. அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டதாக கூறி அவை அகற்றப்பட்டுள்ளதால், திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.