×

சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாவட்ட அமைப்பாளர் மறைவு - திருமா இரங்கல்!!

 

சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாவட்ட அமைப்பாளர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாவட்ட அமைப்பாளர் தம்பி மாம்பட்டி #கிருஷ்ணன் விபத்தில் பலியானார் என்கிற தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். உடனே அவரது தம்பி வீரபாண்டியனையும் ஒன்றிய செயலாளர் சந்திரனையும் தொடர்பு கொண்டு நடந்ததை விசாரித்தேன். துயரத்தைப் பகிர்ந்து கொண்டேன். ஆறுதல் கூறினேன். தொடக்க காலத்தில் சாதிவெறியர்களின் கடுமையான  அச்சுறுத்தல்களுக்கிடையில் துணிந்து முன்னின்று மக்கள் பணியாற்றிய முன்னோடி தம்பி கிருஷ்ணன்.  கட்சிக்கும் தலைமைக்கும் நம்பிக்கைக்குரியவராகக் களமாடியவர். அவரது மறைவு பேரிழப்பாகும். அவருக்கு எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சார்ந்த கட்சியின் முன்னோடிகள், மூத்த தோழர்கள் தவறாமல் அவரது நல்லடக கத்தில் கலந்துகொண்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்திட வேண்டுகிறேன். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும்  நான் மாம்பட்டிக்கு நேரில் சென்று குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். எனவே, இன்று மாலை நடைபெளவுள்ள இறுதி நிகழ்வில் கட்சித் தோழர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.