×

ஃபார்முலா 4 ரேஸ் - இன்று தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள்.. 

 

ஃபார்முலா 4 பந்தயத்தின் பிரதான பந்தயங்கள் இன்று நடைபெற உள்ளதால் போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் குந்து வருகின்றனர்.  

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில்  ஃபார்முலா 4 வகை இரவு நேர கார் பந்தயம் நேற்று உற்சாகமாக தொடங்கியது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் பந்தய அமைப்பு இணைந்து நடத்தும் இந்த போட்டிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே  நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மிக்ஜாம் புயல் காரணமாக நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.  போட்டி நடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் சர்வதேச ஆட்டோமொபைல்  கூட்டமைப்பான  FIA-வின் அனுமதி சான்றிதழ் பெறப்பட்டு,  உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஃபார்முலா 4 போட்டி நேற்று இரவு உற்சாகமாக தொடங்கின.  

கடற்கரையை ஓட்யுள்ள தீவுத் திடலில் தொடங்கி நேப்பியர் பாலம் , சிவானந்த சாலை வழியாக மீண்டும் தீவுத்திடலை  வந்தடையும் வகையில் 3.5 கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது.  இந்த போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சியாக கார் பந்தய வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சீறிப்பாய்ந்த படி பந்தய கார்கள் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மழை காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பந்தய அட்டவணை மாற்றப்பட்டு,  போட்டிகள் தாமதமாக தொடங்கியதால் நேற்று இரவு பயிற்சி பந்தயம் மட்டுமே நடைபெற்றது.  

இரவில் மின்னல் வேகத்தில் பந்தய கார்கள் 14 திருப்பங்களில் சீறிப்பாய்ந்த காட்சிகளை பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்தனர். ஃபார்முலா பந்தைய போட்டிகளில் ஃபார்முலா போர் வகை பந்தயம் நகரின் மையப்பகுதியில் நடத்தப்படும் சர்க்யூட் ரேஸ் வகையைச் சேர்ந்ததால்,  போட்டி நடைபெறும் பந்தய சாலைகள் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு பலத்தை பாதுகாப்புடன் நடைபெற்றது.  நேற்றைய தினம் பயிற்சி பந்தயம் மட்டும் நடைபெற்ற நிலையில், தகுதிச்சுற்று போட்டிகளும்,  இறுதி போட்டியும்  இன்று மாலை நடைபெற உள்ளது.