அடேங்கப்பா... ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட காலா குதிரை!
அந்தியூர் கோயில் திருவிழாவில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் ஒரு கோடி ரூபாய்க்கு குதிரையின் விலை பேசப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற குதிரைச் சந்தை மற்றும் கால்நடைச் சந்தையும் தொடங்கியுள்ளது.
இந்த சந்தையில் குதிரைகள், மலை மாடுகள், குள்ள மாடுகள், முட்டு கிடாய்கள், வேட்டை நாய்கள் ஆகியவை கண்காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. குதிரை கண்காட்சியில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட காலா குதிரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த காலா குதிரையின் சொந்த ஊர் நாமக்கல். ரிலையன்ஸ் குழுமத்தினர் இந்த காலா குதிரையை விலைக்கு கேட்டதாகவும், ஆனால் அதன் உரிமையாளர் வரதராஜன் குதிரையை கொடுக்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.