×

கோயில் வாசலுக்குள் புகுந்த அரசு பேருந்து! பதைபதைக்கும் காட்சி

 

கோவில்பட்டியில் அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த கோவில் வாசலில் மோதி நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி வழியாக தென்காசிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்தப் பேருந்தை  லட்சுமண பெருமாள் ஒட்டி வந்துள்ளார். பேருந்து கோவில்பட்டி புது ரோடு வழியாக அண்ணா பேருந்து  நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து புது ரோடு இறக்கத்தில் உள்ள முச்சந்தி விநாயகர் கோவில் வாசலில் மோதி நின்றது. இதில் பயணம் செய்த சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.