×

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்- 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை

 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டிலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஓராண்டுக்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய 5 சிறார்கள் உட்பட 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட 31 நபர்களின் டிஎன்ஏவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்ட மனிதக்கழிவு டிஎன்ஏவோடு ஒத்துப்போகவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய இதுவரை ஐந்து சிறார்கள் உட்பட 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை அறிவியல் ஆய்வுகத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும் இரண்டு நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளபட்டது. 

இந்த சூழலில் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட சோதனை முடிவுகள் ஒவ்வொரு சுற்றாக வந்த நிலையில் 31 நபர்களின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளும் முழுமையாக வந்த நிலையில் அந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்ட மனித கழிவு டிஎன்ஏவோடு எந்த ஒரு டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்று சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி இருப்பதால் வேங்கைவயல் இறையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 10 நபர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டுமென சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவின் விசாரணை வருகின்ற ஜனவரி 29ம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

மேலும் வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை சேகரிக்கப்பட்ட 31 நபர்களின் டிஎன்ஏ பரிசோதனை முடிவு ஒத்துப்போகவில்லை என்றாலும் இந்த வழக்கிற்கு அது பின்னடைவு கிடையாது இதற்கு பிறகு உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்டு அடுத்தடுத்து சோதனைகள் உள்ளது இந்த வழக்கேஷஅறிவியல் பூர்வமாக அணுக வேண்டியது உள்ளதால் நிச்சயம் அறிவியல் பூர்வமாக அணுகி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.