×

கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது!!

 

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர் கடந்த 7ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய தொடங்கினர். இது  தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தேடினர்.

இந்நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் தீனதயாளன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தனது வீட்டையே தீ வைத்து கொளுத்தியவர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.