எமனாக வந்த குரங்கு..! காரும் லாரியும் மோதி 3 பேர் பலி..!
May 14, 2024, 08:00 IST
உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்-அலிகார்ஹ் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த மூவரும் ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் என்று கூறப்பட்டது. அவர்கள் சென்ற கார், லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர் . மேலும் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சாலையின் குறுக்கே திடீரென்று ஒரு குரங்கு வந்ததால் இவ்விபத்து நடந்திருக்கக்கூடும் என்று காவல்துறை கூறியுள்ளது. இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்