×

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தாய்! இறந்த அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் கதறி அழுத மகன்

 

ஆவடி பட்டாபிராமில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஐடி பார்க் கட்டிடத்தின் 3-ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி பட்டாபிராம் ஐடி பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வந்தார். நேற்று மாலை 3-வது மாடியில் சுவரில் துளையை அடைத்து கொண்டு இருந்துள்ளார் வளர்மதி. அப்பொழுது எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், எச்சரிக்கையும் இல்லாமல் இருந்த லிஃப்ட்காக போடப்பட்ட கதவு திறந்து கொண்டதால் 3-வது மாடியில் இருந்து வளர்மதி தவறி கீழே விழுந்துள்ளார். அப்பெண் விழுந்து நீண்ட நேரம் கழித்து கம்பெனி வாகனத்தில் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆவடி மருத்துவனையில் சோதித்த மருத்துவர்கள் வளர்மதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உடலை கைப்பற்றிய பட்டாபிராம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து பட்டாபிராம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.