×

பல்லாவரத்தை 2 நாட்களாக அதிரவைத்த முதியவர்.. தாலுகா ஆஃபிஸில் நடந்த அதிரடி

 

முதியோர் உதவி தொகை வேண்டி பெட்ரோல் கேனுடன் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக தர்ணா செய்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.


பல்லாவரம் அடுத்த அஸ்தினாபுரத்தை சேர்ந்த முதியவர் நரசிம்மன், அரசு முதியோர் உதவி தொகைக்காக வின்னப்பம் செய்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதமே அதற்கான அரசு ஆணை வெளியானது. இந்த நிலையில் நரசிம்மனுக்கு முதியோர் உதவி தொகை பெற்றுத்தருவதாக சிலர் கூறியதன் பேரில்  நேற்று, இன்றும்  பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் முதியோர் தொகை வழங்க  நரசிம்மன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு ஆதரவாக 10 ரூபாய் இயக்கத்தினரும் உடன் இருந்தனர்.

அப்போது வந்த பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் நரசிம்மனின் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்த நிலையில் அவரின் கோரிக்கை  விசாரித்தார். ஏற்கனவே அரசு உத்தரவிட்ட நிலையில் தேர்தல் காரணமாக 4 மாதமாக வழங்காமல் இருந்துள்ளது என தெரிய வந்தது. இதனையடுத்து அந்த முதியோர் நரசிம்மனிடம் பெட்ரோல் எங்கு எதில் பல்வாங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள் என விசாரித்து அதற்கான வாக்குமூலம் பெற்றார். அதன் அடிப்படையில் குரோம்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவன  மெர்குரி ஏஜென்சி  பெட்ரோல் பங்கிற்கு சென்று உடனடியாக சட்ட விதிகளின் படி செயல்படாமல் போனது என்கிற காரணத்தை கூறி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

மேலும் அரசு எதிராக தூண்டுதல் செய்தவர்கள், பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவர் நரசிம்மன், பெட்ரோல் பங்க் உரிமையார் மீது நடவடிக்கை எடுக்க சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் கைபட வாக்கு மூலம், விடியோ, ஏற்கனே முதியோர் உதவி தொகை ஆனை உள்ளிட்ட ஆதாரத்துடன் புகார் செய்தார். பல்வேறு அமைப்புகள் தனி நபர்களை துண்டுதல் போராட்டத்தை தூண்டுவது, அல்லது அரசு அதிகாரிகளை  மிரட்டி தங்களின் பணிகளை சாதிக்க முயல்பவர்கள் செயல்படும் நிலையில் துணிச்சலாக நடவடிக்கை மேற்கொண்ட வட்டாட்சியரின் நடவடிக்கை சக வருவாய் துறை ஊழியர்களிடம் வரவேற்பை பெற்றது.