“பல்லி மூஞ்சு..” போலீசாரை அபாசமாக பேசியவர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியீடு
Updated: Oct 21, 2024, 20:58 IST
போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது சென்னை காவல்துறை.
சென்னை கடற்கரை பகுதியில் குடிபோதையில் நள்ளிரவில் காரை நிறுத்திய ஜோடியிடம் ரோந்து போலீசார் விசாரித்தபோது, உதயநிதியை கூப்பிடவா என கேட்டு அவர்கள் காவலர்களை இழிவாக பேசிய வீடியோ வைரலானது. இதனையடுத்து மயிலாப்பூரில் விடுதி எடுத்து தங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.