சீர்காழி சத்யா உள்ளிட்ட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்!
ரவுடி சீர்காழி சத்யாவின் கூட்டாளிகள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த பிரதான சத்யா, சீர்காழி சத்யா என்ற அடைமொழியுடன் ரவுடியாக வலம்வரும் நபர். ஐந்து கொலை வழக்கு உட்பட 32 வழக்குகளில் பிரபல ரவுடி சீர்காழி சத்யா தொடர்புடையவர். திண்டுக்கல் மோகன்ராமின் வலது கையாக செயல்பட்டு வரும் இவர், அரசியல் கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல், பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் பரப்பு கூறப்படுகிறது.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தில் சீர்காழி சத்யாவையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். கும்பகோணத்தில் 2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ராஜா என்பவரின் கொலைக்கு பழிவாங்க, குற்றவாளிகள் கோவை நீதிமன்றம் சென்று விட்டு திரும்பிய போது துப்பாக்கியால் சுட்டு மூன்று பேரை ஓட ஓட வெட்டி கொலை செய்த வழக்கில் சீர்காழி முக்கிய குற்றவாளி, பின்னர் விசிக பிரமுகர்களான சகோதரர்கள் இருவரை இரட்டை கொலை வழக்கிலும் சீர்காழி சத்யா குற்றவாளி.
சிறையிலிருந்து வெளியே வந்ததும் தலைமறைவான கடந்த சில மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சீர்காழி சத்யா தனது கூட்டாளிகள், அலெக்ஸ் சுதாகர், மாரிமுத்து மற்றும் பால்பாண்டி ஆகியோருடன் பயங்கர ஆயுதங்களுடன் காரில் செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் வழியாக சென்னை செல்ல முயன்றதாகவும், போலீசார் அவர்களை காரில் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. பிரதான சாலை வழியாக வந்தால் வாகன சோதனையில் சிக்கி விடுவோம் என செங்கல்பட்டில் இருந்து மலைப்பகுதியான பழவேலி வழியாக காரில் சென்ற போது போலீசார் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் சத்யாவும் மற்றும் அவரது கூட்டாளிகளும் எதிர் தாக்குதல் நடத்த முயற்சிக்கதாகவும் சீர்காழி சத்யாவை கால் மற்றும் தோள்பட்டையில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. உடனிருந்த கூட்டாளிகளையும் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். இரண்டு இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரவுடி சத்யாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனை போலீசார் அனுமதித்துள்ளனர்.