×

நாளுக்கு நாள் ஏற்றம் காணும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 உயர்வு..

 

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.  

உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, போர், தேர்தல் காரணாமாக உலக நாடுகளில் நிலவும் அசாதாரன சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை குறைவது போல போக்கு காட்டி வந்தாலும், கணிசமாக  விலை ஏற்றம் கண்டிருப்பதை காண முடிகிறது.  கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை,  கடந்த 4ம் தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் வெள்ளி விலையும் புதிய உச்சமாக கிராம் ரூ.103க்கு விற்கப்பட்டது. 

அதன்பிறகு விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை  அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.  அதன்படி சென்னையில் நேற்று  ஒரு கிராம் 7,095 ரூபாய்க்கும்,  ஒரு சவரன்  56,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.102க்கு விற்பனையானது. 

இந்நிலையில் இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,120க்கும் , ஒரு சவரன் ரூ.56,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதன்மூலம் தங்கம் விலை கடந்த 4ம் தேதி விற்பனையான அதே உச்ச விலையை எட்டியுள்ளது.