×

என் வெற்றிக்கு காரணம் எலான் மஸ்க் தான்... அமெரிக்க அதிபர் நெகிழ்ச்சி உரை..!

 

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  2016ல்  நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக அதிபரான டிரம்ப் அதன்பிறகு 2020ல்  தோல்வியடைந்தார். இந்த முறை 2024ல்  நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று 2வது முறையாக அதிபராகி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார்.


இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்துள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் இந்த  வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் , இவருடைய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் எலான் மஸ்க் தான் என்கின்றன மீடியாக்கள்.  டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உதவ எலான் மஸ்க் செய்த விஷயங்கள் குறித்த விரிவான பதிவு தான் இது.  

எலான் மஸ்க் டொனால்ட் டிரம்ப்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக, அதாவது, 2016 மற்றும் 2020ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல்களில்  ஹிலாரி கிளின்டனுக்கும், அடுத்ததாக ஜோ பைடனுக்கும் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வந்தார். பிறகு திடீரென அப்படியே அதற்கு எதிராக, இந்த ஆண்டு நடைபெற்றுள்ள தேர்தலில் டொனால்ட் டிரம்ப்க்கு ஆதரவு தெரிவித்தார்.


குறிப்பாக  டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியபோது ”  “ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸ் ஆகியோர் மீதெல்லாம் யாரும் கொலை செய்ய முயற்சி செய்யமாட்டார்கள்” எனக் கூறியிருந்தார்.  பைடனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மஸ்க், பைடன் மீது யாரும்  துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டார்கள் எனத் தூண்டிவிடும் அளவுக்குப் பேசி டிரம்புக்கு தனது பலமான ஆதரவை வெளிப்படையாக கூறியிருந்தார்.

தேர்தல் களத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்த பல இடங்களில் அவருடன் வந்து அவருக்காகப் பேசி வாக்குகளையும் சேகரித்துக் கொடுத்தார் மஸ்க். டிரம்ப் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கங்களில் கூட தொடர்ச்சியாக   டிரம்ப்க்கு ஆதரவு தெரிவிக்கும்

பிரச்சாரம் செய்தார். குறிப்பாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் மக்கள்  பாதுகாப்புக்காகக் கையில் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்கிற சட்டம் வரும்.
அந்த சட்டத்திற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும்,  டிரம்ப்க்கு வாக்கு அளிக்கும் வாக்காளர்களுக்கு 47 டாலர் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

பணத்தை வாரி இறைத்து பிரச்சாரம் செய்து வந்த மஸ்க்கிற்கு  அமெரிக்க நீதித்துறை இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனக் கூறி  எலான் மஸ்க்க்கு எச்சரிக்கை விடுத்தது.  அதனையெல்லாம் கவனிக்காமல் தொடர்ச்சியாகவே மஸ்க் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார்.
அதேப்போல, தேர்தலுக்காக பில்கேட்ஸ், கமலா ஹாரிஸுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் ரூ.420 கோடியும்,   டிரம்பிற்கு  132 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பின் படி ரூ.1000 கோடி தேர்தல் நிதியாக அளித்தார்.  


தொடர் நேரடி பிரச்சாரம், ஆதரவு குரல்கள், பண உதவி என  டிரம்ப் வெற்றிக்கு எலான் மஸ்க் அசுரத்தனமாக உழைத்தார் என்றே கூற வேண்டும். தன்னுடைய வெற்றிக்கு பிறகு மஸ்க்கிற்கு முதல் ஆளாக நன்றி தெரிவித்தார்.  ” தேர்தல் வெற்றிக்கு மிகவும் முக்கியமான நபர் எலான் மஸ்க் தான். அவருக்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவரைப்போல ஒரு நபரை நாம் எந்த நேரத்திலும் விட்டுவிடக்கூடாது. அவரை போல இருக்கும் நல்ல மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும்” என டிரம்ப் நெகிழ்ச்சியுடன் தனது நன்றியைத் தெரிவித்தார். 

allowfullscreen