×

விஜயகாந்தின் சிலையை கண்டு கண்ணீர் சிந்திய மகன் திடீரென மயங்கியதால் பரபரப்பு

 

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கிவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த அன்பு சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார். மேலும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.  முன்னதாக விஜயகாந்தின் உருவச் சிலையை கட்டி அணைத்து பிரேமலதா விஜயகாந்த் அழுதார்.

இந்நிலையில் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கிவிழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்தில் சிலை திறப்பு விழா சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.