×

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது!

 

கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அண்மையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யபட்டது.  அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வழக்குகளில் ஜாமின் கிடைத்துவரும் நிலையில் சவுக்கு சங்கர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி எஸ்.பி சிவபிரசாத் பரிந்துரையில் ஆட்சியர் ஷஜீவனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.