×

மழலை பேச்சில் சிறுமி வெளியிட்ட வீடியோ மனசாட்சியை உலுக்கியது - சுத்தம் செய்த அதிகாரிகள்..!

 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முகப்பேர் வேணுகோபால் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தலின் போது இங்கு பணியாற்றிய அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு உணவு, குளிர்பானம், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவற்றை சாப்பிட்டு விட்டு கழிவுகளை ஆங்காங்கே சிலர் போட்டுவிட்டுச் சென்றதாகவும், மேலும் பள்ளி வகுப்பறையில் இருந்த ஸ்லாப்புகளையும் சிலர் உடைத்துப் போட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை விமர்சித்து அந்த பள்ளியைச் சேர்ந்த யுகேஜி மாணவி அகிம்சா பேசிய வீடியோ வைரலாக பரவியது

இதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அந்தப் பள்ளிக்கு சென்று அங்கிருந்த குப்பைகளை அகற்றியதுடன் உடைந்த அலமாரிகள், பெஞ்சுகளையும் சரிசெய்து கொடுத்தனர். மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் கல்பனா நேரில் பார்வையிட்டு சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார்.

<a href=https://youtube.com/embed/zdVluMV25cc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/zdVluMV25cc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">