கழிவு நீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டியபோது வீட்டின் சுவர் சரிந்து விழுந்தது!
Aug 29, 2024, 19:30 IST
கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக குழி தோண்டிய போது அருகில் இருந்த இரும்பு தகடு சீட் கொண்ட வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட எம்பிஎஸ் நகர் பகுதியில் நகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதனையடுத்து கழிவுநீர் கால்வாய் அருகே பிரவீனா என்பவருக்கு சொந்தமான இரும்பு ஷீட் கொண்ட வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
null
வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. மேலும் சுவர் இடிந்துவிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.