×

விஜய்யின் தவெக மாநாடு நடப்பதில் சிக்கல் 

 

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேரும் சகதியும் ஆக மாறிய த.வெ.க மாநாட்டு திடல் 27ஆம் தேதிக்குள் மாநாட்டு பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

*தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியக் மாநில மாநாடு வருகின்ற (அக்டோம்பர்) 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 50 அடி அகலம், 200 அடி நீளத்திற்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வருகின்ற 27ஆம் தேதிக்குள் மாநாட்டுக்கான பணிகளை முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில்  மழையால் மாநாட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது தவெக கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.