×

திருச்சியில் ரயில் புறப்பட்ட போது ஏற முயன்ற பயணி தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு

 

ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவும் கூடாது என ரயில்வே  சார்பில் ரயில் பயணிகளுக்கு பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  ஆனாலும் ஒரு சிலர் ஓடும் ரயிலில் ஏறி இறங்குவதால் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் இன்று காரைக்குடியிலிருந்து சென்னை எக்மோர் செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து நிற்பதற்காக வந்தது. ஆனால் ரயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இறங்கினார். அவர் நிலை தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனே அவரை காயத்துடன் மீட்டனர். 

மேலும் அவர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஜெயச்சந்திரன்(75) என்பதும் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஜெயச்சந்திரனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.