திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி
Updated: Nov 18, 2024, 16:37 IST
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை, மிதித்ததில் பாகன் உதயன் (45) மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் பலியானார். பழங்கள் கொடுக்கச் சென்ற போது யானை ஆக்ரோஷத்துடன் இருவரையும் மிதித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. யானை தெய்வானையின் வயது 26 ஆகும்.
யானை தாக்கியதில் பாகன் உதயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது உறவினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.