×

வி.சி.க. நிலைப்பாடு குறித்து திருமாவளவன் விளக்கம்..!

 

சென்னையில் வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. நிர்வாகி இன்பதுரை, வி.சி.க. தலைவரும். எம்.பி.யுமான திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய இன்பதுரை, திருமாவளவன் எந்த பக்கம் செல்வார் என்று தமிழ்நாடே காத்திருக்கிறது என்றும், அவர் நல்லவர்களோடு இருப்பார் என்றும், திருமாவளவன் நம்மோடுதான் இருப்பார் என்றும் பேசி இருந்தார்.

அதற்கு பதிலளித்து மேடையில் பேசிய திருமாவளவன், மக்களோடுதான் வி.சி.க. நிற்கும். இதுதான் நான் இன்பதுரைக்கு அளிக்கும் பதில். மக்கள் பிரச்சினை என்றால் மக்களுக்காக கட்சி அடையாளங்களை கடந்து வி.சி.க. நிற்கும். தேர்தல் அரசியல் வேறு. மக்களுக்காக போராடுவது என்பது வேறு. தேர்தல் அரசியல் என்பது கட்சி நலன். காலச் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். வி.சி.க. வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா கூட்டணியில் தற்போது இருப்பதால், வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்க தேவையும் இல்லை" என்று அவர் கூறினார்.