×

"தொழிற்சங்கத்துக்கு அனுமதி மறுப்பதே ஒரு அடக்குமுறை"- திருமாவளவன் 
 

 

சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை என விசிக தலைவர்  திருமாவளவன் கூறியுள்ளார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை. அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம். காவல் துறையின் போக்கு நல்லதல்ல.