×

‘மோடிக்கு இன்டர்நேஷனல் நடிகர்’ என்ற பட்டம் கொடுக்க வேண்டும்- திருமாவளவன்

 

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நவம்பர் 26, அரசமைப்புச் சட்ட நாள் குறித்த “அரசமைப்புச் சட்டம்-75 நூல்கள்” வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 5 நூல்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நூல்களை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட அதை முதல் பிரதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பெற்று கொண்டார். உடன் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார், துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், “இன்றைக்கு மிக முக்கியமான நாள் அரசமைப்புச் சட்ட நாள். அனைவரும் இந்த நாளன்று உறுதிமொழி ஏற்கிறார்கள். நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மோடி அரசு அமைந்த நாளில் இருந்து அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டு வருகிறோம். 500,1000 ரூபாய் நோட்டு செல்லாத என்று அறிவித்தபோது அதை நாம் கடுமையாக விமர்சித்தோம். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று பேசினோம். இவர்களிடம் இருந்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் பேசினோம். பல்வேறு மாநிலங்களில் மாநாடு நடத்தினோம். ஒரு புறம் மனுதர்ம சட்டம், மறுபுறம் அரசமைப்புச் சட்டம், ஒடுக்கப்பட்டவர் எப்பொழுதும் ஒடுக்க பட்டவர்களா இருக்க மாட்டார்கள். ஆளுபவர்கள் எப்போதும் ஆளுபவர்களாக இருக்க மாட்டார்கள்.


சமூக கலாச்சாரம், ஆணவ கொலைகள் என அனைத்திலும் மனுதர்ம சட்டம் தான். சமூக தளத்தில் அரசியமைப்பு சட்ட முறை இல்லை என்றார். நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழ் திரையுலகில் அளிக்கப்பட்ட பட்டம். பிரதமர் மோடிக்கு இன்டர்நேஷனல் நடிகர், அவருக்கு வேறு ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டும். அதேபோல் சிஐஏ சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்றார்.