×

மோடியை ‘வெறுப்பானந்தா’ என விமர்சித்த திருமாவளவன்

 

வானுயர்ந்து நிற்கும்  வள்ளுவனின் புகழ்நிலத்தில்.. எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள்  ஒருபோதும் எடுபடாது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணி நேரத்திற்கு தியானத்தை மேற்கொள்கிறார்.  இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று மாலை வருகை புரிந்தார். இதை தொடர்ந்து மாலை 5:40 மணியளவில் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.  அங்கு சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் மாலை 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் விவேகானந்தர் என்ற படகில் பயணித்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். இரவு 7 மணிக்கு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார் .  5 மணி நேரம் தியானம் அதன் பிறகு சிறிது ஓய்வு என மேற்கொண்ட பிரதமர் மோடி நாளை மாலைவரை  45 மணி நேரத்திற்கு தொடர் தியானத்தை மேற்கொள்ளயிருக்கிறார்.

இந்நிலையில் பிரதமரின் தியானத்தை விமர்சித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் “ நரேந்திரா × 
நரேந்திரமோடி

அவர் விவேகானந்தா! 
இவர் வெறுப்பானந்தா! 

அவர் வெறுப்பை உமிழவில்லை! 
அதனால்-
விவேகானந்தா ஆனார். 

இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு. 
அதனால்- 'வெறுப்பானந்தாவாக' 
வலம் வருகிறார்.

வானுயர்ந்து நிற்கும்  வள்ளுவனின் புகழ்நிலத்தில்..
எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள் 
ஒருபோதும் எடுபடாது!” என விமர்சித்துள்ளார்.