×

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டால் கள்ளச்சாரயத்தை ஒழித்துவிட முடியுமா?- திருமாவளவன்

 

கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருவது மலிவான அரசியல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல். திருமாவளவன் எம்.பி் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டால் மட்டுமே கள்ளச்சாரயத்தை ஒழித்துவிட முடியுமா? கொள்கை முடிவு எடுத்து, மத்திய, மாநில அரசுகள் மதுவை தடை செய்ய வேண்டும், கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோருவது மலிவான அரசியல், தரம் தாழ்ந்த அரசியல். சிந்தாந்த ரீதியாக எந்த சமரசத்தையும் விசிக இதுவரை செய்துகொண்டதில்லை, இனியும் செய்யாது” என்றார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 58 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் விஷ சாராய விற்பனையை கட்டுப்படுத்த சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.