×

“திருவொற்றியூர் பள்ளி நாளை முதல் செயல்படும்”

 

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக மாணவிகள் 40-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தேர்ந்த நிலையில் கடந்த நான்காம் தேதி மீண்டும் அதே போன்று 6 மாணவிகள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தண்டையார்பேட்டை கோட்டாச்சியர் மற்றும் பள்ளி கல்வி துறை மண்டல குழு தலைவர் சுகாதாரத்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர் என கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னர் வெளியே வந்நு செய்தியாளர்களை சந்தித்த வருவாய் கோட்டாச்சியர், “விக்டரி பள்ளியில் வாயு கசிவு தொடர்பாக மாணவிகள் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் கேட்டுள்ளோம். வாயு கசிவுக்கான எவ்வித ஆதாரமும் இல்லை. ஆகவே நாளை முதல் 10 முதல் 12- ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும். திருவொற்றியூர் மாநகராட்சி சார்பில் ஒரு வாரம் பள்ளியில் மருத்துவ முகாம் ஆய்வு போன்றவை நிகழ்த்தபடும். மாசுக்கட்டுபாட்டு வாரியம் மாவட்ட பள்ளி கல்வி அலுவலர்  அடிக்கடி பள்ளியை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளோம்.

தொடர்ந்து மாணவிகள் மயக்கமடைந்ததற்கு  பள்ளியின் நான்காவது மாடியில் உள்ள 35 முயல்களின்  சிறுநீரா? அல்லது மாணவிகள் பள்ளியை விடுமுறை அளிப்பதற்காக விஷமத்தனமாக தூவிய் பெப்பர் ஸ்ப்ரேவா?  உடல் நலம் பலவீனமான மாணவிகள் தான் மயங்கினார்களா? என்ற கேள்விக்கு, அது தெரியவில்லை.. ஏதோ வாயு வெளியேறியதாக தெரிகிறது என்று கூறி சென்றார்.