×

இது தான் இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்கூட்டர்... விலை வெறும் 14 லட்சம் மட்டுமே..!  

 

பியாஜியோவின் கூற்றுப்படி, இத்தாலியில் வடிவமைக்கப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய வெஸ்பா 946 டிராகனின் வடிவமைப்பானது, கலாச்சாரங்கள், புதுமைகள் மற்றும் நுட்பங்கள் ஆகியவற்றின் தனித்துவமான ஆற்றல் மற்றும் சக்தியுடன் தொடர்புடையது என்று கூறியுள்ளது.

இது வெஸ்பா 946 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும் மற்றும் இது 12.7 பிஎச்பி மற்றும் 12.8 என்எம் பீக் டார்க்கை வழங்கும் 150சிசி, ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் உருவாக்கத்தில் மெட்டல்-மோனோகோக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் 12-இன்ச் ஸ்டைலிஷ் வீல்களில் இயங்குகிறது மற்றும் ஃபிரண்ட் பக்கத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கைப் பெறுகிறது.

இந்த 946 டிராகன் எடிஷனில், ஹெட்லைட்டிற்கு கீழே டிராகனின் தலை இருக்கும்படியும், அதன் உடல் மற்றும் வால் பகுதி ஸ்கூட்டரின் பின் பக்கம் வரை நீளும் வகையில் தயார் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மரகத பச்சை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக, டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் 200 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. சர்வதேச அளவில் 1,888 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்கள் விற்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.14.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த ஸ்கூட்டர் கம்பிலீட்லி புல்ட் யூனிட் (CBU) வாயிலாகவே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் ஹாங்காங்கின் சந்திரப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக வெஸ்பா 946 டிராகன் சிறப்பு பதிப்பு உலக அளவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இது முற்றிலும் கட்டப்பட்ட யூனிட்டாக (CBU) இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு CKD வாகனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது இந்தியா தயாரிப்பு அல்ல. அதனால் தான் இந்த ஸ்கூட்டருக்கு வரி அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.