×

எனக்கு மிகவும் நெகிழ்ச்சிகரமான தருணம் இது - நரேந்திர மோடி

 

பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசிய மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவின் ஆசையை பிரதிபலிக்கிறது; தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைந்தது போல தேர்தலுக்கு | முந்தைய கூட்டணி எப்போதும் அமைந்தது இல்லை இது இயற்கையாக அமைந்த கூட்டணி, வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி என்றார்.

தொடர்ந்து பேசிய தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு , பாஜக தலைவர்களின் பரப்புரையால்தான் ஆந்திராவில் வெற்றி சாத்தியமானது; உலக அரங்கில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தியதுதான் மோடியின் மிகப்பெரிய சாதனை; சரியான நேரத்தில் மோடி என்ற சரியான தலைவரை இந்தியா பெற்றுள்ளது ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடியால்தான் முடியும்  என்றார்.