×

விளம்பரத்தை பார்த்து அரும்பாக்கத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்! அடித்து விரட்டிய போலீசார்
 

 

ஷூக்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆஃபரில் விற்பனை என விளம்பரப்படுத்தியதால் அரும்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் 4, 5, 6 ஆகிய மூன்று தேதிகளில் ஆண்களுக்கான ஷூக்கள் மற்றும் பெண்களுக்கான அழகு பொருட்கள் ஆஃபரில் விற்பனை என சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டு இருந்த நிலையில் நேற்றும் இன்றும் அதிகளவில் குவிந்த பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முதல்நாள் பொதுமக்கள் பலர் வாங்கிய நிலையில் நேற்று அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் அரும்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதனால் சம்பவ இடத்தில் சூளைமேடு போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தியதுடன், ஆஃபர் அறிவித்த நிர்வாகத்துடன் பேச முற்படுகையில் அவர்கள் விற்பனையை மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். முறையான அனுமதி பெறவில்லை எனவும் ஏமாற்றும் நோக்கில் இத்தகைய ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். விற்பனை அறிவித்த நிறுவனம் எது? விளம்பரப்படுத்திய சமூகத்தில் பக்கங்கள் எவை எவை? என சூளைமேடு போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.