கள்ளக்காதலனை மீட்கக்கோரிய பெண்ணை மிரட்டி 3 மாதங்களாக உல்லாசம்- போலீசாரின் அடாவடி
கள்ளக்காதலனை மீட்கக்கோரிய பெண்ணை மிரட்டி 3 மாதங்களாக உல்லாசம்- போலீசாரின் அடாவை
திருவள்ளூர் அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்ட கள்ளகாதலனை மீட்பதற்காக காவல் நிலையம் வந்த இளம் பெண்ணை மிரட்டி மூன்று மாதங்களாக உல்லாசம் அனுபவித்து வந்த வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த பிராயம்பத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31), கார் ஓட்டுநரான இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை அழைத்து வந்து காட்டுப்பாக்கம் செந்தூர்புரத்தில் தனியாக அறை எடுத்து 3 வருடங்களாக தங்க வைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கார்த்திக்கை வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் வெள்ளவேடு போலீசார் கைது செய்ததால் இந்தப் பெண் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு கார்த்திகை மீட்பதற்காக வந்துள்ளார். அப்போது வெள்ளவேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் பணி புரியும் தலைமை காவலர் ஏசுதாஸ் என்பவர் அந்தப் பெண்ணிடம் உனது கள்ளக்காதலன் சீக்கிரமாக வெளியே வரவேண்டும் என்றால் அவர் மீது மேலும் வழக்கு பிரிவுகள் பதிவு செய்யாமல் இருப்பதற்கு தனக்கு நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கார்த்திக் சிறையில் இருக்கும் வேலையில் தலைமை காவலர் ஏசுதாஸ் கள்ளக் காதலியுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்கள் சிறையிலிருந்து கார்த்திக் பிணையில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. கார்த்திக் பிணையில் வெளியே வந்த பின்னரும் கார்த்திக்கிற்கு தெரியாமல் அவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தலைமை காவலர் அந்தப் பெண்ணிடம் சென்று உல்லாசம் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு காவலர் இயேசுதாஸ் கார்த்திக் இல்லாத நேரத்தில் கார்த்திக்கின் கள்ளக்காதலி இடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கார்த்திக்கின் கள்ளக்காதலிக்கும் போலீசார் ஏசுதாஸ் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கள்ளக்காதலியை தலைமை காவலர் ஏசுதாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது.
வீடு புகுந்து போலீசார் இயேசுதாஸ் தன்னை தாக்கியதாக அவருடைய கள்ளக்காதலன் கார்த்திக்கிடம் அந்த பெண் செல்போன் மூலமாக பேசி வர வைத்துள்ளார். இதனால் அங்கு விரைந்து வந்த கார்த்திக் அங்கிருந்த தலைமை காவலர் இயேசுதாசை தாக்கியுள்ளார். காயமடைந்த இயேசுதாஸ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி திருமழிசையில் உள்ள கார்த்தியின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த வெள்ளவேடு காவல்நிலைய காவலர்கள் இயேசுதாஸ், சரத், தாஸ் உள்ளிட்ட சுமார் 10 பேர் கொண்ட போலீசார் கார்த்தியை மறைவான ஓர் தனி இடத்திற்கு கூட்டி சென்று சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த கார்த்தியை அங்கிருந்து பூவிருந்தவல்லி கூட்டி வந்து பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவலரை தாக்கியதாக கார்த்தி மீது வழக்கு பதிவு செய்த பூவிருந்தவல்லி போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் நீதிபதியிடம் கார்த்திக் நடந்த சம்பவம் தெரிவிக்கவே கார்த்திக்கை பிணையில் நீதிபதி விடுவித்துள்ளார். மேலும் வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலர் ஏசுதாஸ் ஆவடி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கார்த்திகை கடத்திச் சென்று தாக்கிய தலைமை காவலருக்கு உதவிக்கு வந்த 10 போலீசார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.