×

 சிகாகோவில் ரூ.850 கோடி மதிப்பில் 3 புரிந்துணவு ஒப்பந்தங்கள் கையெழுத்து.. 

 


சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ₹850 கோடி மதிப்புள்ள 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.  

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். முதலில் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர், பின்னர் சிகாகோ சென்று அங்குள்ள  முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை  சந்தித்துப் பேசி வருகிறார்.  அந்தவகையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.  

அதன்படி, லிங்கன் எலக்ட்ரில் நிறுவனத்துடன் ரூ. 500 கொடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதேபோல், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.  

விஸ்டியன் நிறுவனத்துடன் ரூ. 250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோவையில் மின்னனு உற்பத்தை மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.