×

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு

 

தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணிநேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. 

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணிநேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.