கனமழை எச்சரிக்கை எதிரொலி- திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கையை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பகா கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.11.2023) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்திருந்தார். முன்னதாக கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடதக்கது.