×

உதயநிதி பிறந்தநாள்- நாளை ஒருநாள் இலவச பேருந்து பயணம் 

 

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 47 தனியார் பேருந்துகள் மற்றும் 25 டெம்போக்களில் இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை முதல்வர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47–வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திமுக இளைஞர் அணி மாநில அமைப்பாளர்  சம்பத் எம்எல்ஏ ஏற்பாட்டில், தமிழ்நாடு அரசின் விடியல் பயணம் போல் புதுச்சேரி முழுவதும் செல்லக்கூடிய 47 தனியார் பேருந்துகள் மற்றும் 25 டெம்போக்களில் இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்று துவக்க விழாவில், சம்பத் எம்எல்ஏ முன்னிலையில் இலவச பேருந்து பயணத்தை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.